அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

06.09.2021 14:42:49

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்திற்காக ஜனாதிபதியால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன.