எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை!

03.03.2026 08:35:08

நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளை தொடர்ந்தும் காணக்கூடியதாக உள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என்ற அச்சத்தால், இந்த வரிசைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் இருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் அரசாங்கமும் உறுதியளித்துள்ளன. இருந்த போதும், மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருள் இருப்பு வைத்திருப்பதால், பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

எனினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பூரணை தினமான நேற்று எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் இன்று கிடைக்கப்பெறும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.