பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்
பிரபல ஹாலிவுட் நடிகை கிர்ஸ்டி ஆலி புற்றுநோய் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகை கிர்ஸ்டி ஆலி. இவர் டிராப் டெட் கார்ஜியஸ், சேம்பியன், பிளைண்ட் டேட், ரன் அவே, சம்மர் ஸ்கூல், லவ்வர் பாய், சூட் டு கில் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.
சிறந்த நடிப்புக்காக எம்மி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றுள்ளார். சியர்ஸ் உள்ளிட்ட பல புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஏற்கனவே 2 தடவை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். கிர்ஸ்டி ஆலிக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கிர்ஸ்டி ஆலி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. மரணம் அடைந்த கிர்ஸ்டி ஆலிக்கு 2 மகன்கள் உள்ளனர்.