24 மணி நேரத்தில் 6,644 பேருக்கு கொரோனா
25.10.2021 17:05:52
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 49,21,995 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28,873 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 9010 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர்.