சேரனுடன் இணைந்த ஸ்ரீபிரியங்கா

16.12.2021 09:00:05

புதுச்சேரி பொண்ணான ஸ்ரீபிரிங்கா ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அகடம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கங்காரு, வந்தாமல, பிச்சுவா கத்தி உள்பட பல படங்களில் நடித்தார். பெண் போலீசாக நடித்த மிக மிக அவசரம் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது அவர் தமிழ்க்குடிமகன் என்ற படத்தில் சேரனுடன் இணைந்து நடிக்கிறார்.

இவர்களுடன் லால், துருவா தீபா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார். படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் வெற்றி மாறன் தொடங்கி வைத்தார்.