அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்குமா இந்தியா ?

02.11.2021 09:38:40

13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்புச் செய்து வரும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது ஓரளவேனும் அழுத்தங்களைப் பிரயோகித்து ஈழ மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருப்பதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் (P. Gajatheepan) தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காத போதிலும், அதனை அரசாங்கத்திற்கு எதிரான சந்தர்ப்பமாக பயன்படுத்த முடியும் என்பதாலேயே தேர்தலை வலியுறுத்துவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.