தனக்கு இழைக்கப்பட்ட அநீதி யாருக்கும் வரக்கூடாது” ரிசாட் ஆதங்கம்
தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எந்தவொரு சிறுபான்மை தலைவருக்கும் ஏற்படக் கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - ஓட்டமாவடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளிலும் தொடர்புடையவர் அல்ல என மீண்டும் தெரிவித்தார்.
இலங்கையில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, இருப்பு உள்ளிட்ட எவ்வளவோ விடயங்கள் எதிர்காலத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே தான் அரசியலில் ஈடுபட்டு வருவதாக ரிஷாத் பதியூதீன் இதன்போது தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தமது மதக் கடமைகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.