த.வெ.க மாநாடு
நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் (27/10/2024) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கட்சிக் கொள்கையை மாநாட்டில் விஜய் அறிவிக்கவிருப்பதால் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே த.வெ.க. மாநாட்டிற்கு வருவதற்குத் தமிழக முழுவதும் உள்ள தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். |
மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கவுள்ள நிலையில் அங்கு வைக்கப்படவுள்ள 600 அடி கொடி கம்பத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றுகிறார். அதன்பின் 6 மணிக்கு மேல் தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசவுள்ளார். அதில் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளையும் அறிவிக்கவுள்ளார். நாளை மாநாடு நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வி.சாலையில் வருகை தந்துள்ளார். மேலும், கட்சியின் முதல் மாநில மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். |