'நோ என்ட்ரி'
நடிகை ஆண்ட்ரியா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘நோ என்ட்ரி’. இப்படத்தை இயக்குனர் ஆர். அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இடம் பெற்று வெற்றியடைந்த பல பாடல்களை இவர் பாடியுள்ளார். சமீபத்தில் இவர் பாடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் ஆர். அழகு கார்த்திக் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'நோ என்ட்ரி'. இதில் ஆதவ் கண்ணதாசன், மானஸ், ரன்யா ராவ், ஜெயஸ்ரீ மற்றும் ஜான்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜம்போ சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட நாய்கள் மனிதர்களை தாக்குவது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த டிரைலரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.