கண்ணீர் விலைமதிப்பற்றது தமன் உருக்கம்
இசையமைப்பாளர் தமன் சமூக வலைதளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
'வாரிசு' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் சமூக வலைதளத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "வாரிசு படத்தின் அனைத்து எமோஷனல் காட்சிகும் அழுதேன் அண்ணா. கண்ணீர் விலை மதிப்பற்றது. , இது என் இதயத்திற்கு நெருக்கமானது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அண்ணா" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.