தைவானில் நிலநடுக்கம்

25.10.2021 17:15:27

தைவானில் ரிக்டர் அளவில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உயிர்ச்சேதங்கள் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

இதுகுறித்து அந்நாட்டு வானிலை மையம் தரப்பில் தெரிவித்ததாவது: தைவானின் கிழக்குப் பகுதியில் நேற்றிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியது. இதன் ஆழம் 67 கிலோ மீட்டர் ஆகும். இந்த நில நடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நில நடுக்கம் குறித்து தைவான் மக்கள் கூறியதாவது: வீட்டின் இரு சுவர்களும் குலுங்கின. நாங்கள் கடுமையான அதிர்வை உணர்ந்தோம். நாங்கள் மரணத்துக்காக பயந்தோம். எங்களுக்கு இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. எங்கிருக்கிறோம் என்று கூட தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தைவானில் தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பல்வேறு கட்டடங்கள் சரிந்தன. மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழப்புகள் ஏற்பட்டதா? ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தைவானில் கடந்த 1999ம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2,400 பேர் பலியாகினர். அடுத்து 2018ம் ஆண்டு 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.