நயன்தாராவை தொடர்ந்து ரெஜினா

23.10.2021 06:11:39

கண்ட நாள் முதல் படம் மூலம் அறிமுகமான ரெஜினா கசான்ட்ரா தொடர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது கார்த்திக் ராஜூ இயக்கத்தில் 'சூர்ப்பனகை' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுதவிர பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து கொண்டிருக்கிறார். சமூகவலைதளத்தில் விஸ்கி விளம்பரத்தை வைத்து போஸ் கொடுத்து அதை புகழ்ந்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இதுஒருபுறம் இருக்க சர்வதேச அளவில் புகழ்பெற்ற பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டை புகைப்படங்களை ரெஜினா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நடிகை நயன்தாராவின் படம் போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை பக்கத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.