எது முக்கியம்?

06.03.2022 09:37:57

புனே மெட்ரோ ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பது குறித்து, செய்தியாளர்களிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.  இது குறித்து அவர் பேசியதாவது:

 

புனேவில் முழுமையடையாத (மெட்ரோ ரெயில்) முக்கியமான திட்டங்கள் உள்ளன. பிரதமர் தொடங்கி வைக்கும் மெட்ரோ சேவை முக்கியமானது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பது மிகவும் முக்கியமானது. 

 

ஆளும் கட்சி அதை தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் அங்கு சிக்கித் தவிக்கும் ஒரு இந்திய மாணவனிடம் பேசினேன். உக்ரைன் எல்லையை கடக்குமாறு இந்திய தூதரகம் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

 

இதற்காக அந்த மாணவர் இருக்கும் இடத்திலிருந்து ஆறு மணிநேரம் நடந்து செல்ல வேண்டும்.மாணவர்கள் நடக்கத் தயாராக உள்ளனர், ஆனால் கடுமையான குளிர், குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு அவர்களுக்கு கவலையளிக்கும் ஒரு முக்கிய காரணம். 

 

ஆளும் கட்சி (பாஜக) இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.