இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி பலி!
லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கிட்டத்தட்ட 150 ராக்கெட்டுகளை ஏவி லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேலிய படைகளும் தீவிரமான வான்வழி தாக்குதலை முன்னெடுத்தனர். லெபனான் பெய்ரூட்(Beirut) பகுதி மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் இந்த வான்வழி தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 59 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். |
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல் படி, லெபனான் தலைநகர் பெய்ரூட்(Beirut) மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த படை தளபதி இப்ராஹிம் அகில்(Ibrahim Aqil) கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதாரங்கள் வழங்கிய தகவலின் படி, ஹிஸ்புல்லா அமைப்பின் உயரடுக்கு ரத்வான் பிரிவு ஆலோசனை கூட்டத்தை நடத்தி கொண்டிருந்த போது அவர்களுடன் இருந்த இப்ராஹிம் அகிலும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு பெய்ரூட்-டில் இருந்த அமெரிக்க தூதரகத்தின் நடத்தப்பட்ட தாக்குதல் நடத்தி 63 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமாக கருதப்பட்ட இப்ராஹிம் அகில் குறித்த தகவலுக்கு அமெரிக்க அரசாங்கம் சுமார் $7மில்லியன்(£5.3m) தொகையை வெகுமதியாக அறிவித்து இருந்தது. அத்துடன், அதே ஆண்டு அமெரிக்க கடல் படைகள் மீது தாக்குதல் நடத்தி 241 அமெரிக்க அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கும் இப்ராஹிம் அகில் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. |