நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை

22.05.2022 16:16:51

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்துப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடைந்தது.

இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கையளித்துள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கா ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும் ஒரு தொகுதி உதவிப்பொருட்கள் இந்தியாவிலிருந்து விரைவில் அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.