மொத்தமாக சரணடைந்த இளவரசர் ஹரி!
பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் பொருட்டு நாடு திரும்பும் திட்டத்திற்கு உதவ வேண்டும் என்று முன்னாள் உதவியாளர்களிடம் இளவரசர் ஹரி உதவி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் எதிர்பார்த்த வாழ்க்கை அமையவில்லை. கடும் விரக்தியடைந்துள்ள இளவரசர் ஹரி தற்போது தமது முன்னாள் உதவியாளர்களை நாடியுள்ளார். தந்தை சார்லஸ் மன்னருடனான உறவை சரிசெய்ய வேண்டும் என விரும்பும் ஹரி, பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளார். |
ஹரியின் புதிய முடிவுகள், அவர் அரச குடும்பத்திற்கு திரும்புவதற்கான நடவடிக்கை என்றே பார்க்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்காவில் இருந்து ஹரி - மேகன் தம்பதி நிரந்தரமாக பிரித்தானியா திரும்பும் எண்ணத்தில் இல்லை என்றே சிலர் குறிப்பிடுகின்றனர். சமீப நாட்களில் தமது பழைய நண்பர்கள், முன்னாள் உதவியாளர்களை தொடர்புகொண்டு ஆலோசனைகள் பெறுவதாகவும், திட்டங்கள் வகுப்பதாகவும் கூறப்படுகிறது. தாம் இதுவரை முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் செயல்வடிவம் பெறவில்லை என்றும் வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என ஹரி கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதாவது, தற்போதைய தனது செயல்பாடுகளை மொத்தமாக மாற்ற வேண்டும் என ஹரி முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். பிரித்தானியாவில் வசிக்கும் தமது பழைய நண்பர்களை ஹரி தொடர்பு கொண்டுள்ளார். ஹரியின் திட்டத்திற்கு பலர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எந்த விளம்பரமும் இன்றி ஹரி மீண்டும் நாடு திரும்பினால் கண்டிப்பாக அது வெற்றிபெறும் என்றே அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இளவரசர் வில்லியம் உடனான உறவு மிக மோசமான கட்டத்தில் இருப்பதையும் ஹரியின் நண்பர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், சார்லஸ் மன்னர் கண்டிப்பாக ஹரியை ஏற்றுக்கொள்வார் என்றே நம்புகின்றனர். |