மீண்டுமொரு விவாதத்தை நடத்துவோம்
அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டுமொரு விவாதத்தை நடத்துவோம் என சக போட்டியாளரான ஜனாதிபதி ஜோ பைடனுக்கு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடக்கவுள்ளதுடன், அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில் ஜோ பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி ஒன்று கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது
இதில் டொனால்ட் டிரம்ப் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் தடுமாறியதையடுத்து, ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து ஜோ பைடனை மாற்ற வேண்டும் என அவரது கட்சியினரே வலியுத்தினர்.
எனினும் அவரே தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில், ஜோ பைடனை மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சவால் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.