தமிழ்நாட்டில் மட்டும் சிம்புவின் மாநாடு

06.12.2021 17:01:08

நடிகர் சிம்பு சினிமாவில் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை. படம் நடிக்க, ரிலீஸ் ஆக என ஏகப்பட்ட தடைகளை சந்தித்துள்ளார்.

ஆனால் பிரச்சனைகளை யோசித்து அப்படியே இருக்காமல் அதில் இருந்து வெளியே வந்து இப்போது புதிய மனிதராக மாறியுள்ளார்.

சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியாகியுள்ள மாநாடு திரைப்படம் இப்போது பட்டய கிளப்பி வருகிறது. எந்த இடத்தில் எடுத்துக் கொண்டாலும் படத்திற்கு நல்ல வசூல் வேட்டை தான்.

ஏற்கெனவே படக்குழு படத்தின் வெற்றியை கொண்டாடிவிட்டார்கள்.

இப்போது என்ன தகவல் என்றால் சிம்புவின் மாநாடு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாம்.