மணிகண்டன் படத்தை கிளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

04.08.2023 10:49:23

8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். இவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார். இந்நிலையில் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் சேதுபதி கிளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.