கமல் படப்பிடிப்பில் இணைந்த காஜல்

02.03.2023 16:38:21

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு பாதியிலே நின்று போனதாலும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பெற்று சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்ததாலும் இந்தியன் 2 படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக தகவல் பரவியது. இதனை காஜல் அகர்வால் மறுத்ததுடன் விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் படத்துக்காக குதிரையேற்ற பயிற்சி எடுக்கும் வீடியோவையும் வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தற்போது இணைந்துள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்துக்கு திரும்பி இருக்கிறேன். இந்த படம் விரைவில் திரைக்கு வரும்'' என்று குறிப்பிட்டு உள்ளார். மேக்கப் அறையில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.