4.5 பில்லியன் டொலர்கள் நாட்டுக்குக் கொண்டுவரத் திட்டம்!

17.04.2024 08:14:17

இந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர்கள் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 

கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.  இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர்கள்  முதலீட்டுக்கான இலக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , 1.8 பில்லியன் டொலர்களை முதலீடுகளாகப் பெற எம்மால்  முடிந்தது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், முதலீடுகள் கணிசமான அளவில் நாட்டிற்குள் வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த போராட்டத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளால், கடந்த ஆண்டு முதல் பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் வரவில்லை எனவும் ஆனால், பிற்பகுதியில், எதிர்பார்த்த அளவை விட முதலீடுகள் நாட்டிற்குள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.