சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா?

09.04.2024 00:17:19

சூர்யா 44 படத்திற்காக, கார்த்திக் சுப்புராஜ்- சூர்யா இருவரும் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர்  பிஸா, இறைவி,ஜிகர்தண்டா, பேட்ட, மகான், மெர்குரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர்  இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா- ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுல் எக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது.

எனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில், சமீபத்தில்,  சூர்யாவின் 44 வது படத்தை கார்த்திக் சுப்புராக் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்படத்தைப் பற்றி பல தகவல் வெளியாகும் நிலையில்,  ரசிகர்கள் அடுத்த அப்டேட்டிற்கு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ்- சூர்யா இருவரும் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளனராம்.
அதாவது, இருவரது சம்பளத்திற்க்காக பணத்தை கடன் வாங்கினால் அதற்கு வட்டி கொடுக்க வேண்டும் என்பதால் இப்படத்திற்கு தற்போது இருவரும் சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது.
 

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டொன் பென்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதால் இருவரும்  இம்முடிவு எடுத்ததாகவும், இப்படத்தின் பிராஃபிட் ஷேர் இருவரும் எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.மேலும், இப்படத்திற்கு பிராஃபிட் ஷேர் அதிகத் தொகை கிடைத்தால் அதையே தன் அடுத்த படத்திற்கான சம்பளமாக இருவரும் நிர்ணயிக்கலாம் எனக் கூறப்படுகிறது.