’வர்த்தக சமூகம் மீது முழு நம்பிக்கை உண்டு’

28.04.2024 09:00:00

சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழகத்தின் 2023/24 வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கை பயணிக்க வேண்டிய பாதையை தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதன்போது எந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்பதை இந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். நாம் இங்கிருந்து நகர்வோமா? நாம் இங்கேயே நின்றுவிடுவோமா? அல்லது பின்னோக்கி செல்ல வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

இன்று நான் சந்தித்த ஒரு இளைஞர் நாட்டிற்கான உங்கள் திட்டங்கள் என்னவென கேட்டார். இந்த நாட்டின் படித்த மக்களுக்காக என்ன திட்டங்களை எடுத்துள்ளீர்கள்? நாட்டின் பௌதீக உட்கட்டமைப்பை மேம்படுத்த நீங்கள் என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? அந்த அப்படி எந்த திட்டமும் இல்லை என்றேன். நான் சந்தைப் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும் என்று நான் அவரிடம் கூறினேன்.

அதன்போது சந்தை சக்திகள் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் முடிவு செய்யும். நமது கொள்கை கட்டமைப்பு என்ன என்பதை நாம் தீர்மானிக்கலாம். அதன்படி, அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து, செயல்படுத்தி, தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.

 இப்பகுதியில் பொருளாதார மையமாக மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படிப்பட்ட உலகில் நாம் எப்படி முன்னேறுவது? நாம் இனி கற்பனை உலகில் வாழ்கிறோமா? அல்லது தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோமா என்பது நீங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

ஏனெனில் நாம் மேற்கொண்டுள்ள பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் இந்த வருடத்துடன் முடிவடையும். நாங்கள் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் பெரிஸ் சமவாயத்துடன் கலந்துரையாடி வருகிறோம். கடன் வழங்குநர்களுடன் அடைய வேண்டிய பெரும்பாலான விடயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் ஒரு விடயம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். அதுவும் விரைவில் தீர்க்கப்படும் என்றார்