இந்தியன் -2 படத்தில் மணிஷா கொய்ராலா?

11.04.2024 00:15:11

இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வரும் நிலையில், மீண்டும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 

கமல்ஹாசந் ஷங்கர் கூட்டணியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இந்தியன்.

இப்படம் இன்று வரை பல ரசிகர்களின் பேவரைட் படம் , பேவரைட் பாடல்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். 
 

இந்த நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில்  வரும் ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தனர். அதாவது தேர்தல் முடிந்து. இந்த  நிலையில்,  இந்தியன் படத்தில் நடித்த மணிஷா கொய்ராலா இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார் என  இணையதளத்தில் தகவல் வெளியாகிறது.
 

ஷங்கருடன் மணிஷா கொய்ராலா எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.