தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அழிக்கப்பட்ட தரவுகளை மீளப்பெறும் நடவடிக்கை

04.10.2021 06:23:20

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுக் கட்டமைப்பிலிருந்து அழிக்கப்பட்ட தரவுகளை மீளப்பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்த நடவடிக்கையில் விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஔடதங்கள் உற்பத்தி ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள், குறித்த தரவுகளுக்கு பொறுப்பாக இருந்த எபிக் லங்கா நிறுவனத்தின் உள்ளேயே அழிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள போதும், அந்நிறுவனத்தை பொறுப்பில் இருந்து நீக்கப்போவதில்லை என ஔடதங்கள் உற்பத்தி ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.