பாஜகவோடு இணைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

26.12.2025 15:35:15

பாஜகவுக்கு சம்பந்தமில்லாமல் யாரோ அந்த பெயரைச் சொல்லிக் கொண்டு வன்முறை செய்தால் அதற்கு நாங்கள் சம்பந்தம் கிடையாது. எல்லாவற்றையும் பாஜக மீது திணிப்பது முதல்வருக்கு வாடிக்கையாகிவிட்டது. வடமாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்ததில் யாருக்கும் ஒப்புதல் கிடையாது. எங்கே தாக்குதல் நடந்தாலும் அதை பாஜகோடு இணைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராராஜன் கூறினார்.

பாஜகவின் தேர்தல் வாக்குறுதி தயாரிக்கும் குழு அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாட்டில் பாஜக என்ன செய்யப் போகிறதோ அதை முன்னிறுத்தி தேர்தல் வாக்குறுதிகள் இருக்கும் எனவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஆறு தொகுதிகள் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடையாது. எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது யாருக்கும் இதுவரை தெரியாது எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார். கனவு கூட்டணியை கணியுங்கள்! முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தென்சென்னை பாஜக சார்பில் சமூக சேவையாற்றிய நான்கு பெண்களுக்கு அடல்ஜி நல்லாட்சி விருதினை பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், திமுகவில் சமூக நீதியே கிடையாது. திமுகவில் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என வரிசையாக உள்ளார்கள். மோடியின் ஆட்சியில் ராணுவம், வெளியுறவு துறை, நிதித்துறை உள்ளிட்ட துறைகளில் பெண் அமைச்சர்கள் பணியாற்றி உள்ளனர். 29 மாநிலங்களில் ஆண்கள் ஆளுநராக இருந்தபோது நான் ஒரே பெண்ணாக பெண் ஆளுநராக செயல்பட்டேன். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? யார் அந்த சார் என்ற எண்ணம் நம் எண்ணத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு அரசு vibe இல்லாமல் அரசாங்கம் மோசமாக உள்ளது, ஆனால் முதலமைச்சர் cm vibe என இளைஞர்களுக்கு போலியான vibeஐ காட்டுகிறார். தமிழ்நாட்டில் என்றும் ஷூட்டிங் தான் நடந்து கொண்டிருக்கிறது. டயர் வெடித்து பேருந்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை, "வாஜ்பாய் நாகரிகமான அரசியலுக்கு ஒரு முன்னோடி. திமுக பாஜகவை சங்கி அது இது என கூறினாலும் திமுக எங்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள், திமுகவுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கொடுத்தது வாஜ்பாய் தான். திமுக வாஜ்பாயை பெரிய அளவில் கொண்டாடி இருக்க வேண்டும் திமுக சார்பில் மட்டுமல்லாது தமிழக அரசு சார்பிலும் வாஜ்பாயின் பிறந்தநாளை கொண்டாடி இருக்க வேண்டும். யார் திமுக உதவியாக இருந்தார்களோ அவர்களை மறந்து விட்டார்கள். வேலைவாய்ப்பு திட்டம், கிறிஸ்துமஸ் விழா என அனைத்திலும் திமுகவினர் அரசியல் செய்கிறார்கள்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் நீக்கப்படவில்லை, 125 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது, அதிகமாக இந்த திட்டத்தில் பெண்கள் தான் பயனடைந்து வருகிறார்கள். எங்கு வன்முறை நடந்தாலும் அதற்கு நாம் ஒப்புதல் கிடையாது. பாஜகவுக்கு சம்பந்தமில்லாமல் யாரோ அந்த பெயரைச் சொல்லிக் கொண்டு வன்முறை செய்தால் அதற்கு நாங்கள் சம்பந்தம் கிடையாது. எல்லாவற்றையும் பாஜக மீது திணிப்பது முதல்வருக்கு வாடிக்கையாகிவிட்டது. வடமாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்ததில் யாருக்கும் ஒப்புதல் கிடையாது. எங்கே தாக்குதல் நடந்தாலும் அதை பாஜகோடு இணைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பிரதமர் மோடியே கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். வன்முறையை யாராலும் ஒப்புக்கொள்ள முடியாது அதை பாஜகவுடன் இணைத்து கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டில் பேருந்துகள் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது. பேருந்துகளை சரியாக நிர்வாகிக்காததே பேருந்து பழுதடைந்து 9 பேர் உயிரிழந்ததற்கு காரணம். அரசு சாதனங்கள் முறையாக பராமரிப்பில் இல்லை, ஆனால் முதலமைச்சர் ஷூட்டிங் நடத்திக் கொண்டுள்ளார். பாஜகவின் தேர்தல் வாக்குறுதி தயாரிக்கும் குழு அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகிறது. நாங்கள் தமிழ்நாட்டின் என்ன செய்யப் போகிறோம் என்பதை முன்னிறுத்தி தான் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் இருக்கும். பாஜக தமிழகத்தை வஞ்சிக்கிறது என பொய் சொல்வதை எடுத்துக்கூறி எங்களது தேர்தல் அறிக்கை இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஆறு தொகுதிகள் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடையாது. எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது யாருக்கும் இதுவரை தெரியாது எந்த அறிவிப்பும் வரவில்லை " இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.