பாரிய மக்கள் போராட்டம் - புலனாய்வுத்துறை எச்சரிக்கை

26.02.2023 18:28:19

மீண்டுமொரு பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கவுள்ளதாக புலனாய்வுத்துறை அரசுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புலனாய்வுத்துறையின் குறித்த அறிவிப்பால், இந்த மக்கள் போராட்டங்களை தடுப்பதற்கான செயல்திட்டங்களை அரசு வகுக்க ஆரம்பித்துள்ளதாகவும் தெரிய வருகிறது

முன்னாள் அதிபருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட “கோட்டா கோ கோம்“ போராட்டத்தை விட தீவிரமான போராட்டமாக அது மாறும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

புலனாய்வுத்துறையின் எச்சரிக்கை

குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் குறித்த போராட்டத்திற்கு முன்னணியாக செயல்படுவார்கள் எனவும் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை ஏற்றம், முறையற்ற வரிச்சுமை, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளுக்கு அரசினால் விரைவில் தீர்வு காணப்படாதுவிடின், கடந்த போராட்டங்களை விட இது உக்கிரமானதாக மாறும் என கூறப்பட்டுள்ளது.

புலனாய்வுத்துறையின் குறித்த எச்சரிக்கையினால், சிறிலங்கா அரசு இந்த போராட்டங்களை அடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், கொழும்பில் சில முக்கிய பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் செயல்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் கூறப்படுகின்றது.