பெரும் சதிகளுக்குப் பின்னால்"பருவு" ZEE5 தளத்தில்!!

18.06.2024 07:10:00

சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இயக்கியுள்ள"பருவு"  சீரிஸை, சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார். 
பவன் சதினேனி ஷோ ரன்னராக பணியாற்றியுள்ளார்.  நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா பட்நாயக் ஆகியோர் நடித்துள்ளனர்.

ZEE5 ஒரிஜினல் தெலுங்கு க்ரைம் த்ரில்லர் சீரிஸான ​​"பருவு" சீரிஸை  அறிவித்துள்ளது.

கவுரவக் கொலைகளுக்குப் பலியாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஒரு தம்பதியினர் தங்களையும் தங்கள் காதலையும்  காத்துக் கொள்ளப் போராடுகிறார்கள், சதிகளைத் தாண்டி அவர்கள் வெற்றி பெறுவார்களா, அல்லது சாதி வேறுபாடுகள் அவர்களைப் பிரிக்குமா? பாரம்பரியத்தைக் கடக்கும்   உலகில், குடும்பங்கள் தங்கள் ஜாதியைக் காப்பாற்ற முனைந்தால் என்னவாகும் என்பது தான் இந்த சீரிஸின் கதை.

ZEE5 இல் "பருவு" பிரத்தியேகமாகத் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஸ்ட்ரீமாகிறது.