ஈரான் போரில் AI பயன்படுத்தும் அமெரிக்கா.
|
ஈரானுடனான மோதலில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதாக அமெரிக்கா ஒப்புக்கொண்ட நிலையில் சீனா எச்சரிக்கை கடும் விடுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக 12 நாட்களுக்கு மேலாக இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரானுடனான போரில் அமெரிக்க ராணுவம் பல்வேறு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
|
|
குறிப்பாக தரவுகளை விரைவாக ஆய்வு செய்ய இந்த AI தொழில்நுட்ப கருவிகள் உதவுவதாக அமெரிக்கா ராணுவ மத்திய கட்டளை(CENTCOM) தலைவர் பிராட் கூப்பர் தகவல் தெரிவித்துள்ளார். பல மணி நேரம் எடுக்கும் தரவு ஆய்வுகளை AI தொழில்நுட்ப கருவிகள் சில நிமிடங்களில் செய்து முடிப்பதால் எதிரிகளை விட வேகமான முடிவு எடுக்க இந்த AI தொழில்நுட்ப கருவிகள் உதவுகிறது என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்த AI தொழில்நுட்ப கருவிகள் தரவு ஆய்வுகளை மேற்கொண்டாலும், இலக்குகளை தாக்குவது தொடர்பான முடிவுகளை அமெரிக்க ராணுவ வீரர்களே எடுப்பார்கள் என்று CENTCOM தலைவர் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ராணுவ தளத்திற்கு பதிலாக பள்ளி மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 175 ஈரானிய சிறுமிகள் கொல்லப்பட்டனர். பழைய உளவு தகவல்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க ராணுவம் இது குறித்து உள் விசாரணை நடத்தி வருகிறது, அதே நேரத்தில் இந்த பழைய உளவு தகவல்களை AI தொழில்நுட்ப கருவிகள் வழங்கியதாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் ராணுவ நடவடிக்கைகளில் கட்டுப்பாடற்ற AI தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவது குறித்து சீனா கடுமையான எச்சரிக்கையை முன்வைத்துள்ளது. பிற நாடுகளின் இறையாண்மை மீது AI தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவது, மனித மரணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை அல்காரிதம்களிடம் கொடுப்பது ஆகியவை தார்மீக சிதைவு என்று சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜியாங் பின் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த போக்கு தொடர்ந்தால், டெர்மினேட்டர் திரைப்படத்தில் வருவது போல் தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு எதிராக திரும்பி உலகை அழிக்கும் சூழல் நிஜமாகி விடும் என்று எச்சரித்துள்ளார். |