ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் பக்தர்களின் கவனத்திற்கு!

22.03.2024 07:45:59

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பை ரத திருவிழா நடைபெறவுள்ளதுடன் நாளையதினம் இரதோட்வசம் இடம்பெறவுள்ளது.

 

வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 9 நாட்கள் தொடர்ந்து மகோற்சவ பெருவிழா நடைபெற்றதுடன் இரதோற்சவம் நாளை இடம்பெறவுள்ளது

நாளைய தினம் காலை 7 மணிக்கு சித்திரத்தேரில் விநாயகர் ஸ்ரீசோமஸ்கந்த மூர்த்தி அம்பாள் முருகள் சண்டேஸ்வரர் மூர்த்திகளும் ஆரோகணித்து ரதோற்சவம் நடைபெறவுள்ளது. பங்குனித்திங்கள் 9 ஆம் நாளான இன்றைய தினம் மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம் நடைபெற்று சப்பை ரதத்திருவிழாவும் நடைபெறவுள்ளன.

பங்குனி உத்தர திருநாளான நாளை மறுதினம் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது