சென்னை ஹைகோர்ட் புதிய தலைமை நீதிபதி நியமனம்!
|
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா பதவி வகித்து வருகிறார். இவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் அடுத்த சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை பரிந்துரை செய்து இருந்தது. |
|
இது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் பரிந்துரையை திரவுபதி முர்மு சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார். நாளை அல்லது நாளை மறுநாள் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஆகும். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார். 1992 ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக மத்திய பிரதேச நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2016 ஆம் ஆண்டு மத்தியபிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தான் அவர் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். |