கருப்பு' படத்துடைய கதைக்களம் இதுவா.
சூர்யா நடிப்பில் கடைசியாக 'ரெட்ரோ' வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே மாதம் ரிலீசான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' ரிலீசுக்காக ஆர்வமுடன் காத்திருப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இப்படம் பற்றி புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
கருப்பு ரிலீஸ்
ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 'கருப்பு' ரிலீஸ் எப்போது என்பது தெரியாமல் அப்செட்டில் இருக்கின்றனர் ரசிகர்கள். அதோடு படம் சம்பந்தமான அப்டேட்டிற்காகவும் காத்திருப்பில் உள்ளனர். இதனிடையில் இப்படம் தொடர்பாக சில தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை கிளப்பி வருகிறது. இந்நிலையில் 'கருப்பு' படத்துடைய கதைக்களம் பற்றி தகவல் ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
ஆன்மீகம் கலந்த ஆக்ஷன் படைப்பாக 'கருப்பு' படத்தினை இயக்கியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. ரசிகர்கள் இடையில் இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் கதை என்னவென்றால் முன்ஜென்மத்தில் அய்யனாராக இருக்கும் சூர்யா, சம காலத்தில் வக்கீலாக வருகிறாராம். அநியாயங்களை தட்டி கேட்கும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படத்தினை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதோடு கிளைமேக்ஸ் காட்சியில் அய்யனாராக வந்து சூர்யா எதிரிகளை வீழ்த்துவது போன்று 'கருப்பு' படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' படத்தில் சூர்யாவுடன், திரிஷா, நட்டி நடராஜ், 'லப்பர் பந்து' ஸ்வாசிகா, யோகி பாபு மற்றும் அனகா மாயா ரவி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கின்றனர்.