
சிவப்பு நிற கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி
24.02.2022 16:19:00
தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.
படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.