அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரேஸில் மக்கள்!

20.03.2024 08:14:34

பிரேஸிலில் நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

பிரேஸிலின் தலைாநகரான ரியோ டி ஜெனிரோவில் நேற்று (18) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், வெப்பத்தைத் தணிக்க மக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் நாட்களில், வெப்பநிலை தொடரும் என்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.