
25 வருடங்களுக்கு பின் நடிக்க வந்த சங்கீதா!
11.03.2025 07:07:00
விஜய் கெரியரில் மிக முக்கிய படங்களில் ஒன்று பூவே உனக்காக. அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சங்கீதா. அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணனை நடிகை சங்கீதா அதன் பிறகு திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். |
சங்கீதா தற்போது 25 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார். அவர் பரத் நடிக்கும் காளிதாஸ் 2 படத்தில் தான் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். |