கொழும்பில் கருப்பு பூஞ்சை நோய் பலருக்கு தொற்று

14.09.2021 06:47:49

கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்றாலும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே முகக்கவசத்தை நீண்ட நாட்களுக்கு பாவிக்கின்றமை, அசுத்தமான முகக்கவசம் பயன்படுத்தியமை போன்றவற்றால் இந்த கருப்பு பூஞ்சை நோய் ஏற்படும்.