இஸ்ரேலின் ஆயுத உரிமங்களை இடைநிறுத்திய பிரித்தானியா!

03.09.2024 07:44:48

காஸாவில் சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறலாம் என்ற அச்சத்தில், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட ராணுவ உபகரணங்களுக்கான உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளது. இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில், ஆபத்தான ஆயுதங்களை காஸாவில் பயன்படுத்தலாம் என்பதால் பிரித்தானியா புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

    

அதாவது, காஸா போர் தொடர்பில் இஸ்ரேலின் ஆயுத உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக, வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "புதிய சட்ட ஆலோசனையின் வெளிச்சத்தில் சுமார் 350 உரிமங்களில் 30 உரிமங்களை அரசாங்கம் நிறுத்துகிறது. இந்த நடவடிக்கையானது போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் உட்பட ராணுவ விமானங்களுக்குள் செல்லும் முக்கிய கூறுகள் மற்றும் தரை இலக்கை எளிதாக்கும் பொருட்களை பாதிக்கும்.

இதுபோன்ற மோதலை எதிர்கொள்ளும்போது, ஏற்றுமதி உரிமங்களை மறுபரிசீலனை செய்வது இந்த அரசாங்கத்தின் சட்டப்பூர்வ கடமையாகும்" என தெரிவித்துள்ளார்.