சமந்தாவுடன் ஜோடி சேரும் உன்னி முகுந்தன்

20.11.2021 11:43:21

தெலுங்கில் குணசேகர் டைரக்சனில் சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. அதேபோன்று கதாநாயகியை மையப்படுத்தி உருவாகவுள்ள யசோதா என்கிற இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார். இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரிஷ் சங்கர் இந்தப்படத்தை இயக்கவுள்ளனர்.

சாகுந்தலம் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக தேவ் மோகன் என்கிற மலையாள நடிகர் நடித்துள்ள நிலையில், இந்த யசோதா படத்திலும் இன்னொரு மலையாள நடிகரான உன்னி முகுந்தன் தான் சமந்தாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

தமிழில் தனுஷ் நடித்த சீடன் படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்தவர் தான் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான பாஹமதி படத்தில் அனுஷ்காவின் ஜோடியாக நடித்த இவர் இப்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்திற்காக சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.