
இன்று இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி !
14.03.2021 08:57:14
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
அஹமதாபாத்தில் இன்று இரவு 7 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் 5 இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இந்த இருபதுக்கு இருபது தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.