ஷங்கர் படத்தில் இணைந்தார் அஞ்சலி

21.02.2022 17:16:41

 

இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கு, தமிழ், இந்தியில் தயாராகும் பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்து வருகிறார்கள். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

இந்த படத்தை தெலுங்கு பட உலகின் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைக்கிறார். ராம்சரண், கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தற்போது இவர்களுடன் நடிகை அஞ்சலியும் இணைந்துள்ளார்.

தற்போது இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் அஞ்சலி கலந்து கொண்டு நடிக்கிறார்.