எனக்கு சம்பளம் முக்கியமில்லை - அனைகா

27.09.2021 08:21:44

நட்பே துணை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் அனைகா. டிக்கிலோனா படத்தில் இரண்டு நாயகியரில் ஒருவராக நடித்தார். இப்படத்தில் ‛பேர் வச்சாலும் வைக்காம போனாலும்...' பாடல் மூலம் பிரபலமாகியுள்ளார். அவர் அளித்த பேட்டி:

மலையாளத்தில் முதலில் நடித்தேன். நட்பே துணை தமிழில் முதல் படம். டிக்கிலோனா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நடிப்பின் மீதான ஆர்வத்தாலேயே நடிக்க வந்தேன். தமிழில் ஒரு படத்திலும், மலையாளத்தில் ஒன்றிலும் நடித்து வருகிறேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும். சம்பளம் முக்கியமல்ல. வித்தியாசமான கதையம்சத்துடன், நடிப்புக்கு சவால் தரும் வேடங்களில் நடிக்க வேண்டும். மாடலிங் பிடிக்கும் என்பதால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறேன். எதிர்மறையான விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் தமிழில் அதிகம் வருகிறது. இது வரவேற்க கூடிய ஒன்று.