சனிக்கிழமை அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை

13.10.2021 14:05:51

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி சனிக்கிழமை அரசுப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பண்டிகை காலம் என்பதால் சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனை பரிசீலனை செய்து பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.