கூலி படத்தில் இணையும் பிரபல ஹீரோ.

09.12.2024 07:18:00

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் சில மாதங்கள் ஐதராபாத்தில் செட் அமைத்துப் படமாக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  மேலும் அமீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடந்து வருகிறது.
 

இந்நிலையில் இப்போது நடிகர் சந்தீப் கிஷன் கூலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை லோகேஷ் படமாக்க உள்ளாராம். ஏற்கனவே சந்தீப் லோகேஷுடன் இணைந்து ‘மாநகரம்’ படத்தில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.