தீ குளிக்க முயற்சி...!
28.02.2022 09:48:37
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அதிமுகவினர் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா சிலை அருகே அதிமுகவினர் கண்டன் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிரான கோசங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில் கீழ்நாத்தூர் பகுதியை சேர்ந்த அன்பழகன்(வயது61) என்பவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் தீ குளிக்க முயன்றார். இதனை அறிந்த அதிமுக நிர்வாகிகள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
இந்த சம்பவத்தால் போராட்டம் நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.