2 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு

07.11.2021 14:43:28

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என சென்ளை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டியளித்தார். வங்கக்கடலில் 9-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை வடதமிழகம் நோக்கி நகரும் என கூறினார். காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என கூறினார்.