
தாளம் இசைக்குழு நடாத்திய இசைச்சமர்
S Line Telecommunication நிறுவனத்தின் முதன்மை அனுசரணையிலும், Nandys Curry and more மற்றும் உதயம் தொண்டுநிறுவனத்தின் இணை அனுசரணையிலும்; யேர்மனியின் தாளம் இசைக்குழு நடாத்திய "தாளத்தில் நீ சேரவா" - இசைச்சமர் 2025 பாடற்போட்டி 05.04.2025 அன்று Dortmund நகரில் நடைபெற்றது.
தமிழீழத்தின் மாபெரும் இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான இசைப்பிரியன் அவர்கள் தலைமையேற்றும் நடுவராகவும் நடாத்திய இந்நிகழ்வில் பாடகர் திரு.பாபு சிவநாதன் அவர்கள் இணை நடுவராகப் பங்கேற்றிருந்தார்.
பொதுச்சுடரினை Watendorf தமிழாலய ஆசிரியர் திருமதி ரஜினி பரஞ்சோதி, Castrop-Rauxel தமிழாலய ஆசிரியர் திருமதி ரஜினி சுந்தரலிங்கம், திருமதி திருவேணி டேவிட் சுதன், உதயம் தொண்டுநிறுவனம் சார்பில் திரு றோய் , தாளம் இசைக்குழுவின் சார்பில் திருமதி யூலியா பெஞ்சமின் ஆகியோர் ஏற்றினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வு தொடங்கியது.
ஏறக்குறைய 24 பாடகர்கள் பங்கேற்ற நிகழ்வில்;
முதல் நிலைக்குத் தெரிவாகி தங்கப்பதக்கம் பெற்றவர்கள்
செல்வன் கஜன் சிவகுமார், செல்வி சந்தியா கேமச்சந்திரன், செல்வி அபிகாயில் சசிறதன்.
இரண்டாம் நிலைக்குத் தெரிவாகி, பரிசுபெற்றவர்கள்:
செல்வன் ஸ்ரெபான் Ayndic, செல்வி டிவைனா அன்ரன், செல்வி மேரி கொல்வின்
மூன்றாம் நிலைக்குத் தெரிவாகி பரிசுபெற்றவர்கள்: செல்வி அக்சா சசிறதன், செல்வன் ஆதவன் பரஞ்சோதி, திரு. வைத்திலிங்கம் சிவகுமார்.
முதல்நிலை வெற்றிபெற்றவர்களுக்கான தங்கப்பதக்கத்தினை Dortmund நகர்வாழ் தமிழீழச் செயற்பாட்டாளர் திரு.ஜெயாகரன் அவர்களும், இரண்டாம்நிலை வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களை திருமதி நேசன் அவர்களும், மூன்றாம் நிலை வெற்றி பெற்றவர்களுக்கான பரிசினை திருமதி நிலானி முகுந்தன் அவர்களும் வழங்க, தாளம் இசைக்குழுக் கலைஞர்களுக்கான மதிப்பளிப்பினை Castrop-Rauxel தமிழாலய நிர்வாகி திரு.சுந்தரலிங்கம் வழங்கி மதிப்பளித்தார்.
போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் ஆறுதல் பரிசில்களும் இசைப்பிரியன் அவர்களாலும் திரு பாபு அவர்களாலும் வழங்கப்பட்டன.
தமிழீழ இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள் தனது தாயக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமை பலரையும் உணர்வுபூர்வமாக நிகழ்வோடு இணைத்திருந்தது.
நிகழ்வு 9:00 மணியளவில் நிறைவுபெற்றது.