எம்மை சீண்டினால் அழித்து விடுவோம்!

09.02.2024 12:47:06

”தம்மை ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தென்கொரியாவை அழித்துவிடுவோம்” என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வட கொரிய  பாதுகாப்பு அமைச்சுக்கு நேற்றைய தினம் விஜயம்  மேற்கொண்டிருந்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது ”தென் கொரியாவுடன் தூதரக உறவைத்  தொடரவோ பேச்சுவார்த்தை நடத்தவோ தமக்கு  விருப்பமில்லை என்றும், தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தென் கொரியாவை அழித்து நிர்மூலமாக்கிவிடுவோம்”  என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.