
இலங்கையின் முதலீட்டுச் சூழல் அமெரிக்கா அதிருப்தி!
இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் நிலைத்தன்மை இல்லாததாகவும், நிறுவன ஊழல் தொடர்ந்து நிலவுவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தனது 2025 முதலீட்டு சூழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. |
புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் லஞ்சக் கோரிக்கைகள் குறைந்துள்ளன என்றாலும், சலுகை பெற்ற குழுக்களால் பாதுகாக்கப்படும் துறைகளில் ஊழல் நீடிக்கிறது என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தேவையற்ற விதிமுறைகள், சட்ட நிச்சயமின்மை, அதிகாரிகளின் பலவீனங்கள் முதலீட்டாளர்களுக்கு சவாலாக உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கம் ஒப்பந்தங்களை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதால், அதானி நிறுவனம் வட மாகாணத்தில் திட்டமிட்டிருந்த 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எரிசக்தி திட்டத்தை கைவிட்டதாகவும் அறிக்கை கூறுகிறது. அதேவேளை, தனியார் துறை தலைமையிலான பொருளாதாரத்தை சிலர் விமர்சிப்பதோடு, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஊக்குவிக்கும் போக்கையும் அமெரிக்க வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. |