ஒரு கிடாயின் கருணை மனு

08.09.2021 08:54:08

தமிழ் சினிமாவில் கவுண்டமணியுடன் கூட்டணி அமைத்து சுமார் 500 படங்களுக்கு மேல் காமெடியனாக நடித்தவர் செந்தில். அதோடு சில படங்களில் அவர் குணசித்ர வேடத்திலும் நடித்திருக்கிறார். தற்போது 70 வயதை அடைந்துள்ள செந்தில் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ள செந்திலுக்கு ஜோடி கிடையாது. அவர் எதற்காக சிறை சென்றார் என்பதுதான் கதையின் சஸ்பென்ஸ். இந்த படத்திற்காக தாடி வைத்த கெட்டப்பில் நடித்துள்ளார் செந்தில்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் தனக்கான டப்பிங் தற்போது பேசி முடித்துள்ளார் செந்தில். வெகுவிரைவிலேயே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் பட தலைப்பை அறிவிக்க திட்டமிட்டுள்ளார் சுரேஷ் சங்கையா.