நேபாள விமான விபத்தில் மீட்க்கப்பட்ட கருப்பு பெட்டிகள்

16.01.2023 21:53:31

இமயமலை தேசமான நேபாளத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிக மோசமான விமான விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் இரண்டு கருப்பு பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தின் போக்ரா நகரில்,நேற்று (15) 72 பேருடன் சென்ற விமானம், புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கோர்ஜ் ஆற்றில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.

கருப்புப் பெட்டிகள்

இந்நிலையில் இன்று (16) விபத்து நடந்த இடத்தில் இருந்து எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் ஆகிய இரண்டும் இன்று மீட்கப்பட்டுள்ளன. அவை ஏற்கனவே நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் (CAAN) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 68 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மீதமுள்ள நான்கு உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

 

விபத்து நடந்த இடம் சேதி ஆற்றின் ஆழமான பள்ளத்தாக்கில் இருப்பதால், தேடுதல் நடவடிக்கைகளுக்கு மிகவும் கடினமாக இருந்ததாக நேபாள ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.